கொய் மீன்களுக்கு நல்ல விலை; மீனவர்கள் மகிழ்ச்சி

கொய் மீன்களுக்கு நல்ல விலை; மீனவர்கள் மகிழ்ச்சி

  கோடியக்கரையில் வலையில் கொய் மீன்களின் அதிகமாக சிக்கும் நிலையில், விலையும் அதிகளவில் கிடைக்கும் என்பதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கோடியக்கரையில் வலையில் கொய் மீன்களின் அதிகமாக சிக்கும் நிலையில், விலையும் அதிகளவில் கிடைக்கும் என்பதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வேதாரண்யம்,பிப்.14- கோடியக்கரையில் மீன வர்கள் வலையில் கொய் மீன்கள் அதிக அளவில் கிடைக்கின்றன. இந்த மீன்களுக்கு நல்ல விலை கிடைப்பதால் மீனவர்கள் மற்றும் வியா பாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நாகை மாவட்டம் வேதா ண்யத்தை அடுத்த கோடி க்கரையில் அக்டோபர் வரை மீன்பிடி சீசன் கால கும். இந்த சீசன் காலத்தில் நாகை, மயிலாடு றை, தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆயி க்கணக்கான மீனவர்கள் இங்கு தங்கி மீன்பிடி தாழில் செய்து வருகின்றனர்.

கோடியக்கரையில் வழக்கமாக இந்த சீசன் காலத்தில் வாவல், லா, ஷீலா, இறால், நண்டு உள்ளிட்ட 50-க்கும் மற்பட்ட வகையான மீன்கள் நாள்தோறும் பிடிக் ப்படும். பின்னர் பிடிக்கப்பட்ட மீன்கள் தமிழகம் -பின்நில ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள் ட்ட மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படும். இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக மீனவர்கள் கொய்மீன்கள்வலையில் நாள் ஒன்றுக்கு 20 டன் முதல் 100 டன் வரை கொய் மீன்கள் கிடைக்கின்றன. கோடியக்க ரையில் பிடிக்கப்படும் இந்த கொய் மீன்கள் லாரி மூலம் தூத்துகுடிக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

அங்கு கொய் மீனிலிருந்து மீன் எண்ணெய் எடுக்கப்பட்டு பின்னர் அதன் கழிவுகளை கொண்டு கோழி தீவனம் தயாரிக்கப்படுகிறது. ஒருகிலோ கொய்மீன் ரூ.40-க்கு விலை போகிறது. மீனவர்கள் மகிழ்ச்சி இதனால் நாள் ஒன்றுக்கு சுமார் ரூ.25 லட்சம் வரை மீன் வர்த்தகம் நடைபெறுகிறது. நல்ல விலை கிடைப்பதால் மீனவர்கள் மற்றும் மீன் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags

Next Story