காவல் ஆய்வாளர்கள் செய்த நற்செயல்
பிளாஸ்டிக் பொம்மைகளை விற்றுக் கொண்டிருந்த பெண்ணின் மூன்று மாத கை குழந்தைக்கு கொசு வலையுடன் கூடிய உயர்தர பஞ்சு மெத்தை வாங்கி அளித்த காவல் ஆய்வாளர்கள் செய்த நற்செயல், காண்போரை நெகிழ வைத்தது.
செங்கல்பட்டு தாலுகா காவல் ஆய்வாளர் P. புகழேந்தி , காவலர் சதீஷ்குமார் ஆகிய இருவரும் ரோந்து அலுவலாக அவசரமாக சென்று கொண்டிருந்த பொழுது செங்கல்பட்டு ராட்டினம் கிணறு பாலத்தின் அருகில் பிளாஸ்டிக் பொம்மைகளை விற்றுக் கொண்டிருந்த பெண் ஒருவர் தனது மூன்று மாத கை குழந்தையை தரையில் கோனிப் பையை விரித்து பையின் மீது கிடத்தி கொஞ்சிக் கொண்டிருந்தார். அக்குழந்தையோ தரையில் உள்ள கற்கள் ஊன்றியதால் சற்று கடினபட்டு நெளிந்து கொண்டிருந்தது. இதைக் கண்ட காவலர் சதீஷ்குமாரும், ஆய்வாளரும் உடனடியாக குழந்தைக்கு கொசு வலையுடன் கூடிய உயர்தர பஞ்சு மெத்தையை வாங்கி வந்து அதில் குழந்தையை படுக்க வைத்தனர், காவல் துறையின் அன்பான அணுகுமுறை அனைவரையும் மனம் நெகிழ வைத்தது.
Next Story