அடிதடியில் ஈடுபட்டவர் மீது பாய்ந்த குண்டாஸ்

அடிதடியில் ஈடுபட்டவர் மீது பாய்ந்த குண்டாஸ்

குண்டாஸ்

திருநெல்வேலி மாவட்டம்,சிவந்திபட்டிபில் அடிதடி வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

நெல்லை மாவட்டம், சிவந்திபட்டி கார்மேகனார் தெருவை சேர்ந்த சந்தனம் மகன் சுப்பிரமணியன் (41). இவர் மீது அடிதடி உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. தற்போது ஒரு வழக்கில் தாழையூத்து போலீசார் கைது செய்து பாளை மத்திய சிறையில் அடைத்தனர்.

இவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய நெல்லை எஸ்பி சிலம்பரசன், தாழையூத்து இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் ஆகியோர் கலெக்டர் கார்த்திகேயனிடம் பரிந்துரைத்தனர். அவரது உத்தரவின் பேரில், சுப்பிரமணியனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ததற்கான உத்தரவு நகலை போலீசார் நேற்று பாளை மத்திய சிறை அதிகாரிகளிடம் வழங்கினர்.

Tags

Next Story