கோபுராஜபுரம் கற்பக விநாயகர் ஆலய பால்குட திருவிழா
பால்குட ஊர்வலம்
கோபுராஜபுரம் கற்பக விநாயகர் ஆலய பால்குட திருவிழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா கோபுராஜபுரம் வடக்கு தெருவில் அமைந்திருக்கும் ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலய பால் குடம் திருவிழா நடைபெற்றது கடந்த 21 ஆம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சி தொடங்கியது. அதனைத் தொடர்ந்து நேற்று காலையில் கற்பக விநாயகருக்கு பால்குடம் காவடி எடுத்து முக்கிய வீதிகள் வழியாக திரளான பக்தர்கள் ஆலயத்திற்கு வந்தடைந்தனர் அதன் பிறகு விநாயகருக்கு அபிஷேக ஆராதனை சிறப்பாக நடைபெற்றது மாலையில் ஸ்ரீ கற்பக விநாயகருக்கு சந்தன காப்பு அலங்காரம் மாவிளக்கு பூஜை நடைபெற்றது .அதனை தொடர்ந்து வாண வேடிக்கையும் நடைபெற்றது நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு கற்பக விநாயகரை தரிசித்து வழிபட்டனர் .இதற்கான ஏற்பாடுகளை கோபுராஜபுரம் வடக்கு தெரு கிராமவாசிகள் செய்திருந்தனர்
Next Story