திருவேங்கடம் அருகே நற்செய்தி கூட்டம்

திருவேங்கடம் அருகே  நற்செய்தி கூட்டம்
X
திருவேங்கடம் அருகே நற்செய்தி கூட்டம் நடைபெற்றது
தென்காசி மாவட்டம், சத்திரப்பட்டி சிஎஸ்ஐ கிறிஸ்தவ தேவாலயத்தின் சார்பில் நடைப்பெற்ற நற்செய்தி கூட்டத்தில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

தென்காசி மாவட்டம், திருவேங்கடம் அருகே சத்திரப்பட்டி சிஎஸ்ஐ கிறிஸ்தவ தேவாலயத்தின் சார்பில் தபசு கால நற்செய்தி கூட்டம் நேற்று இரவு லோகநாதபுரம் காலனியில்வைத்து நடந்தது கூட்டத்திற்கு சத்திரப்பட்டி சேகர உதவி குரு பொன்ராஜ் தலைமை வகித்து செய்தியளித்து ஆசி வழங்கினார். இதில திருநெல்வேலி திருமண்டல வாலிபர் ஐக்கிய சங்க ஊழியர்கள் தேவ செய்தி அளித்தனர் சபை ஊழியர் ராஜா உள்ளிட்ட ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story