குவைத் தீ விபத்தில் இறந்தவரின் குடும்பத்திற்கு அரசு உதவி - ஜெயக்குமார் வலியுறுத்தல்.

குவைத் தீ விபத்தில் உயிரிழந்த இராயபுரத்தை சேர்ந்த சிவசங்கரின் மகளுக்கு அவரது கல்வி தகுதிக்கேற்ற அரசுப்பணியை அரசு வழங்க வேண்டும்‌ என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது சமூக வலைதள பக்கத்தில், குவைத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 தமிழர்கள் உட்பட 45 இந்தியர்களின் உயிரிழப்பு வேதனை அளிக்கிறது. குடும்பத்திற்காக தங்கள் வாழ்க்கையையே இழந்துள்ள நம் சகோதரர்களின் குடும்பங்களுக்கு துணை நிற்பதே மனித மாண்பு. இதில் தனது சொந்த ஊரான இராயபுரத்தில் சிவசங்கர் என்பவரும் மரணமடைந்தார் என்ற செய்தியறிந்து அவரை இழந்து நிற்கும் அவரது குடும்பத்தினருக்கு தன்னுடைய ஆறுதலை தெரிவித்ததாக பதிவிட்டுள்ளார்.

தந்தையை இழந்து வாழ்வாதாரமின்றி இருக்கும் அவரது குடும்பத்தில் பட்டப்படிப்பு முடித்துள்ள அவரது மகளுக்கு தகுதிக்கேற்ற அரசுப்பணியை இந்த அரசு வழங்க வேண்டும்‌. தற்போது பள்ளி பயின்று வரும் அவரது மகனுக்கு உயர்கல்வியில் அவரின் சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கி எதிர்காலத்திற்கு துணை நிற்பதாக உறுதியளித்து உள்ளதாக, தெரவித்துள்ளார். கொச்சி விமான நிலையத்தில் இருந்து வாகனங்கள் மூலம்‌ உடல்கள் தமிழ்நாடு கொண்டு வரப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

கொச்சியில் இருந்து தமிழ்நாட்டின் அந்தந்த பகுதிகளை சேர்ந்த விமான நிலையங்களுக்கு விமானம் மூலம் உடல்களை அரசு கொண்டு வந்து அருகிலுள்ள பகுதிகளுக்கு அனுப்பியிருக்க வேண்டும். மேலும் அரசு சார்பில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.5-லட்சம் அறிவித்துள்ள நிலையில் அதனை‌ மேலும் உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Tags

Next Story