அரசு புறந்தள்ளிய குடிநீர் கிணறு: ஜெயங்கொண்டம் பொதுமக்கள் அசத்தல்
தூர்வரிய மக்கள்
ஜெயங்கொண்டம் அருகே 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கிய பழங்கால கிணற்றை, கிராம மக்களே தாமாக முன்வந்து தூர்வாரி அசத்தினர். முந்தைய காலத்தில் முன்னோர்கள் கிணற்று நீரை வடிகட்டி குடிநீராக பயன்படுத்தி வந்தனர். கிணற்று நீர் உடலுக்கு குளிர்ச்சியாகவும், குடிப்பதற்கு சுவையாகவும் இருந்ததால் முன்னோர்கள் அதனை பயன்படுத்தி வந்தனர். நாகரீகம் என்ற பெயரில் இன்றைய காலகட்டத்தில் பழங்காலத்தில் வெட்டப்பட்ட கிணறுகள் எல்லாம் இருக்கும் இடம் தெரியாமல் போய்விட்டது.
தற்போது குடிநீருக்காக பயன்படுத்தும் கிணறுகளை பார்ப்பதே அரிதாக உள்ளது. இந்நிலையில் 1954ம் ஆண்டில் சுமார் 70 ஆண்டுகால பழங்கால கிணற்றை பொதுமக்களே முன் நின்று கிணற்றை தூர்வாரினர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே சூரியமணல் கிராமம் மீனாட்சி நகரில் உள்ள இந்த வெட்டக்கிணறு எனும் பொதுக் கிணற்றில் நீர் எடுப்பதற்கு சூரியமணல் சுற்றியுள்ள கிராமத்திலிருந்து வந்து தினசரி காலை, மாலை என இரு வேலையும் தண்ணீர் எடுத்துச் செல்வது வழக்கம்.
இந்த கிணற்றை பயன்படுத்தி வந்தனர். மேலும் இந்த கிணற்று நீர் சுத்தமாகவும், சுவையாகவும் இருப்பதால், கோடை காலத்தில் நீண்ட தூரம் சைக்கிள் வந்துகூட குடிநீரை எடுத்துச் செல்வது இன்றளவில் வழக்கமாக உள்ளது என அக்கிராம மக்கள் பெருமிதத்தோடு தெரிவித்தனர். இப்படி பல்வேறு வரலாற்று சிறப்புமிக்க பழங்கால வெட்டக்கிணறு தோன்றியது முதல் இதனால் வரை தூர் வாரவில்லை. இதனால் ஊற்று நீர் சரியாக ஊற்றெடுக்க முடியாமல்,
மிகவும் சுகாதாரமின்றி தண்ணீர் கலங்கலாக மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்துள்ளது. இதில் விரக்தி அடைந்த பொதுமக்கள் கிணற்றை தூர்வார வேண்டுமென அரசுக்கு பலமுறை கோரிக்கை வைத்திருந்த நிலையில், யாரும் கிணற்றை கண்டு கொள்ளவில்லை. இந்த நிலையில் ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த கிராம மக்கள் குடிநீர் தேவை கருதி பழங்கால கிணற்றை நாமே ஒன்று கூடி தூர் வார வேண்டும் என முடிவெடுத்தனர்.
பழங்கால கிணற்றில் சாரம் அமைத்து, சுமார் 10க்கும் மேற்பட்டோர் முறையான பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடித்து, தூர் வாரும் பணிகளை உயிரை பணயம் வைத்து மேற்கொண்டு, தற்போது அதில் வெற்றியும் பெற்றுள்ளனர்.
எல்லா உதவிகளுக்கும் அரசையே எதிர்பார்க்காமல், தாமாகவே முன்வந்து பழங்கால கிணறை மீட்டதன் மூலம் பிற கிராமங்களுக்கு முன்னுதாரணமாக சூரியமணல் கிராம மக்கள் உள்ளனர் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு சான்றாக அமைந்துள்ளது