அலுவலக பயன்பாட்டுக்கு அரசு கட்டிடம் வாடகைக்கு இருக்கு!

அலுவலக பயன்பாட்டுக்கு அரசு கட்டிடம் வாடகைக்கு இருக்கு!

 அலுவலக பயன்பாட்டுக்கு அரசு கட்டிடம் வாடகைக்கு இருப்பதால் ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என் ஈரோடு மாவட்ட கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார். 

அலுவலக பயன்பாட்டுக்கு அரசு கட்டிடம் வாடகைக்கு இருப்பதால் ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என் ஈரோடு மாவட்ட கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார்.
ஈரோடு 106 / 3, காந்திஜி ரோடு என்ற முகவரியில் உள்ள படைவீரர் மாளிகையின் முதல் தளத்தில் 827.00 சதுர அடியும், இரண்டாம் தளத்தில் 890.93 சதுர அடியும் மற்றும் மூன்றாம் தளத்தில் 570.00 சதுர அடியும் சேர்த்து மொத்தம் 2,287.93 சதுர அடி இடம் அலுவலக உபயோகத்திற்கு காலியாக உள்ளது. இவ்விடத்திற்கு தமிழக அரசின் பொதுப்பணித்துறையினரால் நிர்ணயிக்கப்படும் வாடகையே வசூல் செய்யப்படும். இவ்விடமானது மத்திய, மாநில அரசு அலுவலகங்களுக்கும் மற்றும் வங்கிகளுக்கும் / பொதுத்துறை நிறுவனங்களுக்கும் மாத வாடகைக்கு உரிம ஒப்பந்த அடிப்படையில் உரிம கட்டணத்திற்கு விடப்பட உள்ளது. மேலும் விவரங்கள் அறிந்திட முன்னாள் படைவீரர் நல துணை இயக்குநர் அலுவலகத்தை நேரிலோ அல்லது தொலைபேசி எண் 0424 2263227 வாயிலாகவோ தொடர்பு கொள்ளுமாறு ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்கள்.

Tags

Next Story