மலை கிராமங்களை புறக்கணிக்கும் அரசு பேருந்து
அரசு பேருந்து
ஆறுகாணி, பத்துகாணி உள்ளிட்ட கிராமங்களை புறக்கணிக்கும் அரசு பேருந்துகள். தொடர்ந்து இயக்க பொதுமக்கள் கோரிக்கை.
கன்னியாகுமரி மாவட்டம் மலை கிராமமான ஆறுகாணியில் இருந்து மதுரைக்கு அரசு பஸ் பல வருடங்களாக இயக்கப்பட்டு வருகிறது. இதனால் ஆறுகாணி, பத்து காணி, கற்றுவா, பேணு உள்ளிட்ட மலை கிராமங் கள் மற்றும் அதை சார்ந்த பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு மார்த்தாண்டம், தக்கலை, நாகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் செல்லவும் வசதியாக உள்ளது. காலை 7.45க்கு ஆறுகாணி வரும் பஸ் 8.15 க்கு மதுரைக்கு புறப்படும். இதனால் காலையில் பள்ளி, கல்லூரி செல்லும் மலை கிராம மாணவர்களுக்கு இந்த பஸ் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. கடந்த சில மாதமாக இந்த பஸ் காலையில் ஆறுகாணிக்கு செல்லாமல் நடுவழியில் இருந்து திருப்பி செல்வதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். இது குறித்து அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்க வில்லை. இரண்டு நாட்களுக்கு முன் பஸ் ஆலஞ்சோலை அணை ஜங்ஷனில் திருப்பி விடப்பட்ட போது, மக்கள் புகார் தெரிவித்தனர். ஆனால் டிரைவர் பதில் கூறாமல் பஸ்சை எடுத்துச் சென்றார் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். ஆகவே மக்கள் நலன் கருதி உயர் அதிகாரிகள் நடவடிக்க எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story