விக்கிரவாண்டி அருகே அரசு பஸ் தடுப்புக்கட்டையில் மோதி விபத்து

விக்கிரவாண்டி அருகே அரசு பஸ் தடுப்புக்கட்டையில் மோதி விபத்து

 விக்கிரவாண்டி அருகே அரசு பஸ் தடுப்புக்கட்டையில் மோதி ஏற்பட்ட விபத்தில் ஒருவருக்கு படுகாயம் உண்டானது.

விக்கிரவாண்டி அருகே அரசு பஸ் தடுப்புக்கட்டையில் மோதி ஏற்பட்ட விபத்தில் ஒருவருக்கு படுகாயம் உண்டானது.

சென்னையில் இருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு கன்னியாகுமரி நோக்கி நேற்று மதியம் அரசு பஸ் ஒன்று புறப்பட்டது. பஸ்சை திருநெல்வேலியை சேர்ந்த ஆபேல் அபிரகாம் (வயது 50) என்பவர் ஓட்டினார். இந்த பஸ் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வடக்கு புறவழிச்சாலையில் உள்ள அண்ணா சிலை அருகில் இரவு 8 மணி அளவில் சென்று கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த விழுப்புரத்தை சேர்ந்த வெங்கன் (50) என்பவர் சாலையை கடக்க முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக ஆபேல் அபிரகாம் ஓட்டிவந்த பஸ், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையோரத் தில் இருந்த தடுப்புக்கட்டையில் மோதி நின்றது. இந்த விபத்தில் வெங்கன் பலத்த காயமடைந்தார்.

மேலும் பஸ்சின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது. இருப்பினும் பஸ்சில் பயணித்தவர்கள் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். இது பற்றி அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த விக்கிரவாண்டி போலீசார் காயமடைந்த வெங்கனை மீட்டு சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Tags

Next Story