நாகர்கோவில் சாலை சென்டர் மீடியனில் மோதிய அரசு பஸ்

X
கன்னியாகுமரி மாவட்டம்,நாகர்கோவிலில் அரசு பேருந்து கான்கிரீட் சென்ட்ர் மீடியன் மீது அரசு பஸ் மோதியதில் விபத்து ஏற்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் இருந்து மார்த்தாண்டம் நோக்கி நேற்று இரவு அரசு பஸ் ஒன்று புறப்பட்டு சென்றது. பார்வதிபுரம் மேம்பாலம் அருகே பஸ் சென்ற போது, சாலை நடுவில் வைக்கப்பட்டுள்ள கான்கிரீட் சென்ட்ர் மீடியன் மீது அரசு பஸ் மோதியது. தொடர்ந்து அடுத்தடுத்து, எதிரே தக்கலையில் இருந்து வடசேரி நோக்கி வந்த லாரி, ஒரு கார் போன்றவை கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாயின.
அடுத்தடுத்து வாகனங்கள் மோதி கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதில் பஸ், லாரி, கார் சேதமடைந்தன. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் இல்லை. இதில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதை அடுத்து போக்குவரத்து போலீசார் சம்பவ இடம் சென்று போக்குவரத்து சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர். மேலும் சேதமடைந்த கான்கிரீட் கட்டைகள் அகற்றும் பணி நடைபெற்றது.
Next Story
