கார் மோதி அரசு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து - 27 பேர் காயம்
விபத்துக்குள்ளான கார்
திருச்சியில் இருந்து வேளாங்கண்ணிக்கு அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. நீடாமங்கலம் அருகே உள்ள வையளத்தூர் பகுதியில் சாலையின் வளைவில் பேருந்து திரும்பிய பொழுது , எதிரில் திருவாரூரில் இருந்து வந்த கார் ஒன்று பேருந்தின் மீது மோதியது. கார் மோதிய வேகத்தில் அரசு பேருந்து அருகில் இருந்த சாலை ஓர பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த நீடாமங்கலம் போலீசார் , தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று காயம் அடைந்த 27 பேரை மீட்டு உடனடியாக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து நீடாமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story