லாரி மீது அரசு பஸ் மோதி விபத்து - 14 பேர் காயம்

லாரி மீது அரசு பஸ் மோதி  விபத்து - 14 பேர் காயம்
X

 விபத்து 

திண்டுக்கல் - திருச்சி 4 வழிச்சாலையில் அய்யலூர் அருகே தங்கம்மாபட்டி பகுதியில் ஒட்டன்சத்திரத்தில் இருந்து திருச்சிக்கு காய்கறி ஏற்றிக்கொண்டு சென்ற லாரி பழுதடைந்தது. அதனை ஓரமாக நிறுத்த டிரைவர் மெதுவாக ஓட்டிச்சென்றார்.நள்ளிரவு சமயம் என்பதால் பின்னால் வந்த அரசு பஸ் டிரைவருக்கு லாரி மெதுவாக செல்வது தெரியவில்லை. இதனால் கண்ணிமைக்கும் நேரத்தில் லாரி மீது அரசு பஸ் பயங்கரமாக மோதியது. இதில் நிலைதடுமாறிய லாரி சென்டர் மீடியனில் மோதி கவிழ்ந்தது. இதில்நல்லுச்சாமி(49), வள்ளி(52), கிருஸ்ணராஜ்(50), தேவராஜ்(55), ரோஜாவள்ளி, சிவக்குமார், பிரபாகரன், லட்சுமி, பஸ் டிரைவர் கிருஷ்ணராஜ்(55) உள்பட 14-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.அவர்களை மீட்டு திண்டுக்கல் மற்றும் மணப்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வடமதுரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story