மினி டெம்போ மீது அரசு பேருந்து மோதி விபத்து

மினி டெம்போ மீது அரசு பேருந்து மோதி விபத்து

விபத்து 

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே அரசு பேருந்து மினி டெம்போ மீது மோதிய விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி அடுத்த தச்சூர் பகுதியைச் சேர்ந்தவர் செல்லமுத்து மகன் விஜயகுமார், 32; அரசு பஸ் டிரைவர். இவர், நேற்று அதிகாலை சென்னையில் இருந்து கள்ளக்குறிச்சி நோக்கி பஸ்சை ஓட்டிச் சென்றார். 4:50 மணியளவில் உளுந்துார்பேட்டை பஸ் நிலையம் அருகே வந்தபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த பஸ், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த மினி டெம்போ பின்னால் மோதியது.

இதில் மினி டொம்போ முன்னோக்கிச் சென்று, முன்னால் நிறுத்தப்பட்டிருந்த 3 பைக்குகள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சாலையோர டீ கடையில் டீ குடித்து கொண்டிருந்த உளுந்துார்பேட்டை மாரியம்மன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்த லட்சுமணன் மகன் மதியழகன், 24; என்பவர் மட்டும் லேசான காயமடைந்தார். இது குறித்து உளுந்துார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story