அரசு பேருந்து மோதி ஒருவர் பலி - போலீசார் விசாரணை

அரசு பேருந்து மோதி ஒருவர் பலி - போலீசார் விசாரணை

 விபத்து 

காரைக்குடி அருகே அரசு பேருந்து மோதி ஒருவர் பலி - போலீசார் விசாரணை.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே உள்ள கோவிலூரில், சிவகங்கையில் இருந்து தேவகோட்டைக்கு அரசு பேருந்து வந்து கொண்டிருந்தது. அப்போது காரைக்குடியில் இருந்து கோவிலூர் கெமிக்கலில் வேலை பார்க்கும் ஆறுமுகம் என்பவர் தனது வீடு உள்ள நெசவாளர் காலனிக்கு இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் மீது அரசு பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். உடலை கைப்பற்றிய குன்றக்குடி காவல் துறையினர் உடல் கூறு ஆய்வுக்காக காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர் .

Tags

Next Story