அரசு பேருந்து லாரி மீது மோதி விபத்து - 15 பேர் காயம்

மதுரையில் இருந்து ஏராளமான பயணிகளுடன் திருநெல்வேலிக்கு சென்று கொண்டு இருந்த அரசு பேருந்தை திருநெல்வேலியை சேர்ந்த வில்லிராஜன் என்பவர் ஒட்டி வந்து உள்ளார். இந்த நிலையில் திருநெல்வேலிக்கு சென்று கொண்டு இருந்த அரசு பேருந்து சாத்தூர் சுங்கச்சாவடி அருகே வந்த போது முன்னால் சென்ற லாரி மீது மோதியத்தில் சாலையின் மறுபுறம் நின்ற லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அரசு பேருந்து ஓட்டுநர் உட்பட 15க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு காயம் அடைந்தனர் இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வச்சகாரப்பட்டி போலீசார் மற்றும் பொதுமக்கள் விபத்தில் காயம் அடைந்த பயணிகளை மீட்டு சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்தால் சுங்கச் சாவடியில் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது இந்த விபத்து குறித்து வச்சகாரப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
