இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதி விபத்து - ஒருவர் பலி

X
தேனி மாவட்டம் சின்னமனூரை சேர்ந்தவர் சிவா, பில்டிங் காண்ட்ராக்டர். இவர் டைல்ஸ் எடுப்பதற்காக டைல்ஸ் கடை ஓனர் சப்பாணித்துரை என்பவருடன் இருசக்கர வாகனத்தில் பாளையம் மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வேகமாக வந்த அரசு பேருந்து டூவீலர் மீது மோதியது .காயமடைந்த இருவரையும் மீட்டு அருகில் இருந்தவர்கள் உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிவா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சப்பாணித்துரை சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags
Next Story
