நெஞ்சு வலியால் துடித்த பயணி - உயிரை காப்பாற்றிய ஓட்டுனர் , நடத்துனர்

ஊத்தங்கரை அருகே நெஞ்சுவலியால் துடித்த பயணியை மருத்துவமனையில் சேர்த்து காப்பாற்றிய பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனரை பொதுமக்கள் பாராட்டினர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த காட்டேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் பகுதியில் பேருந்தில் பயணித்த பென்னாகரம் பகுதியைச் சேர்ந்த அசோகன் என்பவர் அதிகாலை சித்ரா பௌர்ணமி தினத்தை முன்னிட்டு திருவண்ணாமலை சென்று கிரிவலம் முடித்துவிட்டு சேலம் கோட்டம் எருமையம்பாளையம் II கிளை பகுதியில் செயல்படும் பேருந்தில் பயணம் மேற்கொண்டனர்.

ஊத்தங்கரை அடுத்த காட்டேரி பகுதியில் பேருந்து வந்து கொண்டிருந்தபோது பேருந்தில் பயணம் செய்த பயணி திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது உடனடியாக பேருந்து ஓட்டுநர் மகேந்திரன் மற்றும் நடத்துனர் கோவிந்தன் அவசர அவசரமாக நெடுஞ்சாலையில் இருந்து அரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மருத்துவமனைக்கு பேருந்துடன் சென்று சிகிச்சைக்காக அசோகன் என்பவரை காட்டேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்தனர். இந்த நிலையில் முதலுதவி சிகிச்சை செய்த மருத்துவர்கள் அவரை காப்பாற்றினர் மேலும் காலதாமதம் ஆயிருந்தால் அசோகன் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கும் என மருத்துவர்கள் கூறினர்.

ஓட்டுனரின் சாமார்தியத்தால் உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்த ஓட்டுநர் மற்றும் நடத்துனருக்கு பயணிகள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர் இந்த சம்பவம் சுமார் இரண்டு மணி நேரம் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளித்து வந்த நிலையிலும் பொதுமக்கள் எந்த வித அவசரப்படாமல் பொறுமையாக இருந்தது இப்பகுதியில் பெரும் நெகிழ்ச்சி ஏற்படுத்தியது. சகபயணிக்கு ஆபத்தான சூழ்நிலையில் உடன் வந்த பயணிகள் பொறுமை காத்து அவரை மீண்டும் அதே பேருந்தில் நலமுடன் ஏற்றி சென்றனர். மருத்துவமனை வளாகத்தில் வந்த பொதுமக்கள் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் மற்றும் பயணிகளுக்கு பாராட்டுகளை தெரிவித்தனர்

Tags

Next Story