புதுக்கோட்டையில் அரசு பேருந்து ஓட்டுநர் தர்ணா போராட்டம்

புதுக்கோட்டையில் அரசு பேருந்து ஓட்டுநர் தர்ணா போராட்டம்

தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்

புதுக்கோட்டை போக்குவரத்துக் கழகம் மண்டல அலுவலகம் முன்பு அரசு பேருந்து ஓட்டுநர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டையில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மண்டல அலுவலகம் முன்பு அரசு பேருந்து ஓட்டுநர் தர்ணா போராட்டம்... புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார்.

இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநராக 1997 ஆம் ஆண்டு முதல் பொன்னமராவதியில் பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு கடந்த 2018 ஆம் ஆண்டு கண் குறைபாடு ஏற்பட்டுள்ளது, அவருக்கு கண்ணில் குறைபாடு உள்ளதால் ஓட்டுநர் பணிக்கு தகுதியற்றவர் என மருத்துவர்கள் சான்று அளித்துள்ளனர்.

அதன் பிறகு அவருக்கு ஆலங்குடி கிளை போக்குவரத்து கழகத்தில் நந்தகுமாருக்கு காவலர் பணி வழங்கப்பட்டுள்ளது. தற்போது நந்தகுமாருக்கு ஆலங்குடி கிளை மேலாளர் பணி வழங்க மறுத்து, கண் குறைபாடு தொடர்பான மருத்துவ குறிப்புகள் செல்லாது எனவும் தெரிவித்து ஓட்டுனர் பணியை மேற்கொள்ள வலியுறுத்தியுள்ளார். வாகன ஓட்ட தகுதி அற்றவர் என தெரிந்தும் பரந்த 15 நாட்களுக்கு மேலாக பணி தடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் குடும்ப வறுமை காரணமாக எந்த பணியை கொடுத்தாலும் செய்வதாக நந்தகுமார் கூறியும், இதற்கு பணி வழங்க கிளை மேலாளர் மறுத்துள்ளார்.

எனவே நந்தகுமார் தனக்கு பணி வழங்க மறுப்பதை கைவிட்டு பணி வழங்க வேண்டும் என கூறி புதுக்கோட்டையில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மண்டல அலுவலகம் முன்பாக நந்தகுமார் கர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். அரசு பணியில் சேர்ந்ததிலிருந்தே திமுக தொழிற்சங்க உறுப்பினராக இருந்து வருவதாகவும், திமுகவைச் சேர்ந்த தனக்கே இப்படி ஒரு நிலைமை எனவும் அவர் கவலை தெரிவித்தார்.

Tags

Next Story