நாகர்கோவிலில் அரசு பஸ் டிரைவர் சஸ்பெண்ட்

நாகர்கோவிலில் அரசு பஸ் டிரைவர் சஸ்பெண்ட்
மழைநீரில்  அரசு பஸ் சிக்கியதாக வைரலான வீடியோ
வள்ளியூர் அருகே ரயில்வே சுரங்கப்பாதையில் பஸ் சிக்கிய சம்பவத்தில் அரசு பேருந்து ஓட்டுநர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து திருச்செந்தூருக்கு 65 பயணிகளுடன் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பஸ் நேற்று முன்தினம் மாலையில் சென்று கொண்டிருந்தது. பஸ்ஸை குமரி மாவட்டம் குளச்சல் பணிமனையை சேர்ந்த சசிகுமார் என்பவர் ஓட்டி சென்றார்.

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே ரயில்வே சுரங்கப்பாதையை கடக்க முயன்ற போது, அங்கு தேங்கி இருந்த மழை நீரில் சிக்கி பஸ் நின்றது. இதனால் பயணிகள் தவித்தனர். அதை தொடர்ந்து தீயணைப்பு துணையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, தீயணைப்பு படையினர் விரைந்து வந்து பஸ்ஸில் இருந்த பயணிகளை மீட்டனர். மேலும் அந்த வழியே வாகன போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

இதற்கு இடையே பஸ் சுரங்கப்பாதை வழிவந்த நேரம் அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் பஸ் செல்ல வேண்டாம், மழை தண்ணீர் தேங்கியுள்ளது என்று கூறியதும், கூறியும் டிரைவர் சசிகுமார் தொடர்ந்து பஸ்ஸை ஓட்டிச் சென்று பஸ் தண்ணீரில் சிக்கி தவிக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதை தொடர்ந்து ஓட்டுனர் சசிகுமாரை சஸ்பெண்ட் செய்து நாகர்கோவில் கோட்ட அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் மெர்லின் ஜெயந்தி உத்தரவிட்டுள்ளார்.

Tags

Next Story