சாலையோர கடைக்குள் புகுந்த அரசு பேருந்து


சங்ககிரியில் சாலையோர கடைக்குள் புகுந்த அரசு பேருந்தால் பரபரப்பு ஏற்பட்டது.
சங்ககிரியில் சாலையோர கடைக்குள் புகுந்த அரசு பேருந்தால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட தேவூர் மைலாம்பட்டி பகுதியில் குமாரப்பாளையத்தில் இருந்து 25 பயணிகளுடன் எடப்பாடி நோக்கிச் சென்றுக் கொண்டிருந்த அரசுப் பேருந்து, தாறுமாறாகச் சென்று, சாலையோரம் இருந்த கடைக்குள் புகுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விபத்தில், கடைக்குள் இருந்த மூதாட்டி காயங்களுடன், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து குறித்து தேவூர் காவல்துறையினர் வழக்குப்பதிவுச் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story


