புத்தாண்டு கொண்டாட்டத்தில் அரசு பஸ் கண்ணாடி உடைப்பு
சேலம் அம்மாபேட்டையில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் அரசு பஸ் கண்ணாடி உடைப்பு
சேலம் அம்மாபேட்டையில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் அரசு பஸ் கண்ணாடி உடைப்பு
சேலத்தில் இருந்து சென்னைக்கு நள்ளிரவு 1.30 மணியளவில் ஒரு அரசு பஸ் சென்றது. இந்த பஸ்சை தாரமங்கலத்தைச் சேர்ந்த டிரைவர் ரவிக்குமார் (52) என்பவர் ஓட்டினார். அம்மாபேட்டை மிலிட்டரி ரோட்டில் பஸ் வந்தது. அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர்கள் பஸ்சை வழிமறித்து டிரைவர் மற்றும் பயணிகளுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தனர். அப்போது சில இளைஞர்கள் பஸ்ஸை தட்டினர். இதை அறிந்த டிரைவர் ரவிக்குமார் இளைஞர்களை தட்டி கேட்டார். அப்போது ஆத்திரம் அடைந்த வாலிபர் பின் பக்கம் கண்ணாடியில் ஸ்பிரே பாட்டிலை கொண்டு எரிந்துள்ளார். இதில் கண்ணாடி உடைந்து சிதறியது. இதில் பயணிகளுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை. இது குறித்து டிரைவர் அம்மாபேட்டை போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கண்ணாடியை உடைத்த வாலிபர் யார்? என்று தேடி வருகின்றனர்.
Next Story