இருதரப்பினர் மோதலில் அரசு பேருந்தின் கண்ணாடி உடைப்பு

இருதரப்பினர் மோதலில் அரசு பேருந்தின் கண்ணாடி உடைப்பு

கண்ணாடி உடைக்கப்பட்ட அரசு பேருந்து 

உளுந்துார்பேட்டை அருகே இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் அரசு விரைவு பஸ்சின் கண்ணாடியை உடைத்த நபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்னர்.

உளுந்துார்பேட்டை அடுத்த குணமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் அருண்குமார், 26; இவரது நண்பர் பிரகாஷ், 24; இருவரும் நேற்று மாலை பைக்கில் ஒலையனுார் அருகே தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே உளுந்துார்பேட்டையை நோக்கி சாலையை கடக்க முயன்றனர். அப்போது அவரது பைக் முன்னால் ஒலையனுார் பகுதியைச் சேர்ந்த ஒருவரின் பைக் நிறுத்தப்பட்டிருந்து. பைக்கை நகர்த்தும்படி அருண்குமார் கூறியுள்ளார்.

இதனால் அருண்குமாருக்கும், ஒலையனுார் பகுதியைச் சேர்ந்த இளைஞர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு இரு தரப்பினராக தாக்கிக் கொண்டனர். அப்போது கோயம்புத்துாரில் இருந்து விழுப்புரம் நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் சென்ற அரசு விரைவு பஸ்சின் முன்பக்க கண்ணாடியை அங்கிருந்த இளைஞர்கள் சிலர் கற்களை வீசி உடைத்து சேதப்படுத்தினர். இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதனால் அங்கு பதற்றம் நிலவியது. இந்த தகராறில் குணமங்கலம் பகுதியைச் சேர்ந்த அருண்குமார், பிரகாஷ் ஆகியோர் படுகாயமடைந்தனர். தகவல் அறிந்த உளுந்தூர்பேட்டை இன்ஸ்பெக்டர் வீரமணி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று இரு தரப்பினரையும் விரட்டியடித்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story