அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து

அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து

அரசு பேருந்து கவிழ்ந்த விபத்தில் காயமடைந்தவர்களுக்கு விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்படுகிறது.


அரசு பேருந்து கவிழ்ந்த விபத்தில் காயமடைந்தவர்களுக்கு விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்படுகிறது.

கோவையில் இருந்து கோவில்பட்டி சென்ற அரசுப் பேருந்து விருதுநகர்- சாத்தூர் சாலையில் அக்கரார்பட்டி பாலம் அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 24 ஆண்கள் 8 பெண்கள் 7 குழந்தைகள் உட்பட 39 பேர் லேசான காயமடைந்தனர்.விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். கோவையிலிருந்து கோவில்பட்டி நோக்கி சென்ற அரசு பேருந்தை திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த முருகபூபதி (36) என்ற ஓட்டுநர் பேருந்தை ஓட்டி வந்துள்ளார்.

பேருந்தில் பெண்கள் குழந்தைகள் உட்பட 40 க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். இன்று அதிகாலையில் விருதுநகர் சாத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் வச்சகாரபட்டி பாலத்தின் தடுப்பு சுவர் மீது மோதி டயர் வெடித்தது.இதில் பேருந்து தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஓட்டுநர் முருகபூபதி நடத்துனர் பிரதீப் உட்பட 24 ஆண்கள் 8 பெண்கள் , 7 குழந்தைகள் உட்பட பேருந்தில் பயணம் செய்த 39 பயணிகள் காயமடைந்தனர்.

காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வச்ச காரப்பட்டி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Tags

Next Story