உடைந்த ஜன்னலால் அரசு பேருந்துக்குள் மழை - பயணிகள் அவதி

கொடைக்கானல் மலை கிராமங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகளை முறையாக பராமரிக்க பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் நபிற்பகல் வேளை முதல் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக ஒரு சில பகுதிகளில் கன மழையாகவும்,ஒரு சில பகுதிகளில் மிதமான மழையாகவும் பெய்து வருகிறது, இதனையடுத்து கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் இருந்து தினந்தோறும் பெரும்பள்ளம்,வடகவுஞ்சி உள்ளிட்ட பல்வேறு மலைக்கிராமங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இதனை தொடர்ந்து நேற்று மலைக் கிராம பகுதிக்கு இயக்கப்பட்ட பேருந்தின் வலது பக்க ஜன்னலின் மேற்பகுதியில் உள்ள கண்ணாடி உடைந்துள்ளது, நேற்று பெய்த மழையால் பேருந்தின் உடைந்த கண்ணாடி பகுதி வழியாக இருக்கைகள் மீது மழை நீர் விழுந்து வருகிறது, இதனால் இருக்கையில் அமர்ந்து பயணம் செய்யும் பயணிகள் இருக்கையில் அமராத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது, இதனை கொடைக்கானல் போக்குவரத்து கழக பணிமனையினர் கவனம் செலுத்தி மலைப்பகுதியில் இயக்கும் பேருந்துகளை முறையாக பராமரிப்பு செய்து தரமான முறையில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் எழுந்துள்ளது.

Tags

Next Story