நத்தமேடு- சென்னை இடையே புதிய வழித்தடத்தில் அரசு பஸ் சேவை
பேருந்து சேவை துவக்கம்
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி காணை ஊராட்சி ஒன்றியத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான கல்பட்டு நத்தமேட்டில் இருந்து கல்பட்டு, மாம்பழப்பட்டு, காணை, விழுப்புரம், திண்டிவனம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு வழியாக சென்னை வரை புதிய வழித்தடத்தில் அரசு பஸ் சேவை இயக்க விழா நத்தமேடு கிராமத்தில் நடைபெற்றது.
விழாவில் விக்கிரவாண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான நா.புகழேந்தி கலந்துகொண்டு நத்தமேடு- சென்னை வரை புதிய வழித்தடத்தில் அரசு பஸ் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத் தார். பின்னர் அவர், பயணிகளுடன் அந்த பஸ்சை சிறிது தூரம் ஓட்டிச்சென்றார். இவ்விழாவில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ம.ஜெயச்சந்திரன், காணை ஒன்றியக்குழு தலைவர் என்.கலைச்செல்வி, தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் கல்பட்டு வி.ராஜா, ஆர்.முருகன், ஆர்.பி.முருகன், மாவட்ட கவுன்சிலர் சிவக்குமார், ஒன்றியக்குழு துணைத்தலைவர் வீரராகவன், அரசு போக்குவரத்துக்கழக பொதுமேலாளர் அர்ஜூனன், தொ.மு.ச. பொதுச்செயலாளர் சேகர், தொ.மு.ச. தலைவர் ஞானசேகரன், ஒன்றிய கவுன்சிலர் ஜெயாகுமரன், சேட்டு, பாரதி சசிக்குமார் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் பழனி, செல்வம், செல்வராஜ், கருணாகரன், வக்கீல் அணி பொன்.கோபு உள்பட மாவட்ட, ஒன்றிய, கிளை நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.