அரசு பேருந்து உடைப்பு
வாணியம்பாடி அருகே அரசு பேருந்து கண்ணாடி உடைக்கப்பட்ட நிலையில், பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினர்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே அரசு பேருந்து கண்ணாடி உடைப்பு. அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர்த்தப்பினர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பணிமனையில் இருந்து வெள்ளைகுட்டை , ஆலங்காயம் வழியாக திருவண்ணாமலை மாவட்டம் போளூர் சென்று (TN.23 N 2013) எண் கொண்ட அரசு பேருந்து நேற்றிரவு 10க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றி கொண்டு ஆம்பூர் நோக்கி திரும்பி வந்து கொண்டிருந்தது போது வாணியம்பாடி அடுத்த வெள்ளக்குட்டை பகுதியில் மர்ம நபர்கள் அரசு பேருந்தின் மீது கல் வீசியதில் பின்பக்க கண்ணாடி உடைந்து சேதமானது. அப்போது பேருந்தில் பயணம் செய்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். சம்பவம் குறித்து பேருந்து ஓட்டுனர் ரவி ஆலங்காயம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அரசு பேருந்து மீது கல்வீசி கண்ணாடி உடைத்து சேதப்படுத்திய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.