போலீசார் பாதுகாப்புடன் இயங்கிய அரசு பஸ்கள்

போலீசார் பாதுகாப்புடன் இயங்கிய அரசு பஸ்கள்

 சங்ககிரியில் போலீசார் பாதுகாப்புடன் அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. 

சங்ககிரியில் போலீசார் பாதுகாப்புடன் அரசு பஸ்கள் இயக்கப்பட்டன.
சேலம் மாவட்டம் சங்ககிரி அரசு போக்குவரத்து பணிமனையிலிருந்து அனைத்து பேருந்துகளும் போலீசார் பாதுகாப்பு உடன் வழக்கம் போல் இயக்கப்பட்டது. போக்குவரத்து தொழிலாளர்களின் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக தொழிற்சங்கங்கள் அறிவித்திருந்த நிலையில், சேலம் மாவட்டம் சங்ககிரி அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து நகர மற்றும் வெளியூர்களுக்கு செல்லும் 90 சதவீதம் பேருந்துகளும் வழக்கம்போல் அனைத்து வழித்தடத்திலும் இயக்கப்பட்டது.. மேலும் அனைத்து வழித்தடங்களிலும் பேருந்துகள் வழக்கம் போல் இயக்கப்பட்டு வருவதால் பள்ளி மாணவ மாணவிகள், பயணிகள் மற்றும் பணிக்கு செல்பவர்கள் எந்த ஒரு சிரமம்யின்றி பயணித்தனர். அதோடு பணிமனை மற்றும் சங்ககிரி பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags

Next Story