திருச்செந்தூர் கோவில் வாசலில் அரசு பேருந்துகள் நின்று செல்ல நடவடிக்கை

திருச்செந்தூர் கோவில் வாசலில் அரசு பேருந்துகள் நின்று செல்ல நடவடிக்கை

திருச்செந்தூர் கோவில்

திருச்செந்தூர் கோவில் வாசல் அருகே  அரசு பேருந்துகள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2ஆம் படை வீடாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் திகழ்கிறது. இந்த கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளியூர், வெளி மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் வந்து செல்கின்றனர். வெளியூரிலிருந்து வரும் அரசு பஸ்கள் கோவில் வாசல் வரை வந்து பக்தர்களை ஏற்றி இறக்கி செல்வது வாடிக்கை. தற்போது கோயில் டோல்கேட் கட்டண பிரச்சனையில் அரசு பஸ்கள் கடந்த சில மாதங்களாக கோயில் வாசல் வரை வருவதை தவிர்த்து வருகின்றன.

இந்நிலையில், திருச்செந்தூரில் அனைத்து அரசு பேருந்துகளும் கோவில் வாசலில் நின்று பயணிகளை ஏற்றியும் இறக்கியும் செல்ல வேண்டும் என்று அனைத்து சமுதாய மக்கள் நல சங்கம் சார்பில், திருச்செந்தூர் அரசு போக்குவரத்து கழக கிளை மேலாளரிடம் மனு அளிக்கப்பட்டது. இதனை எடுத்து அனைத்து அரசு பேருந்துகளும் கோவில் வாசலில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story