அரசு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் ஆலோசனைக் கூட்டம் !
ஆலோசனைக் கூட்டம்
திருப்பூர் மாவட்டஆட்சியர் அலுவலகத்தில் அரசு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கலெக்டர் அலுவலகத்தில் அரசு கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் ஆலோசனை கூட்டம்.
திருப்பூர் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. பல்லடம் பகுதி ஆபரேட்டர்கள் கூட்டம், திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு அரசு கேபிள்டிவி ஆபரேட்டர்கள் மற்றும் தொழிலாளர்கள் நலவாரிய வாரியத்தில் கேபிள்டி டி.வி. ஆபரேட்டர்கள் இணைவது குறித்தும், இதனால் கிடைக்கிற பயன்கள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.
மேலும், கேபிள் டி.வி. ஆபரேட்டர்களின் சந்தேகங்களுக்கும் டிஜிட்டல் சிக்னல் டிஸ்ட்ரிபூட்டர் மற்றும் கேபிள் டி.வி. தாசில்தார் ஆகியோர் விளக்கமளித்தனர்.
இதில் பல்லடம் பகுதிகளை சேர்ந்த கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் பலர் கலந்துகொண்டனர். மேலும், அரசு கேபிள் டி.வி. சார்பில் எச்.டி. பாக்ஸ் வழங்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
Next Story