இணைய சேவை இல்லாத அரசு இ- சேவை மையம்

இணைய சேவை இல்லாத அரசு இ- சேவை மையம்
X

 காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள இ- சேவை மையத்தில் போதியளவு இணையதள வசதி இல்லாததால் பணியாளர்களும், பயனாளிகளும் அவதிப்படுகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள இ- சேவை மையத்தில் போதியளவு இணையதள வசதி இல்லாததால் பணியாளர்களும், பயனாளிகளும் அவதிப்படுகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக நுழைவாயிலில், அரசு கேபிள் டிவி நிறுவனம் கீழ், இ- சேவை மையம் இயங்கி வருகிறது. இங்கு விண்ணப்பிக்கும் மக்களிடம், சேவைக்கு ஏற்ப கட்டணம் பெறப்படுகிறது. ஆனால், கணினியை இயக்க தேவையான இணையதள வசதி கூட, கேபிள் டிவி நிறுவனம் முறையாக தராததால், இங்குள்ள தற்காலிக ஊழியர்கள் அன்றாடம் அவதிப்படுகின்றனர். இதே மையத்தில், ஆதார் சேவையும் வழங்கப்படுகிறது. ஆதார் சேவைக்கு, எல்காட் எனப்படும் எலக்ட்ரானிக் கார்ப்பரேஷன் இணைய சேவை வழங்குகிறது. அதிலிருந்து, இ- - சேவை மையத்திற்கு தற்காலிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், பல நாட்கள் முறையாக இணைய சேவை கிடைக்காமல் ஊழியர்கள் அவதிப்படுகின்றனர். மேலும், சில நேரங்களில் மொபைல் வாயிலாக இணைய சேவை பெற்று, கணினியை இயக்கி, மக்களின் விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய வேண்டிய நிலையில் ஊழியர்கள் தள்ளப்பட்டு உள்ளனர். எனவே, அரசு கேபிள் டிவி நிறுவனம் முறையாக இணைய சேவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்."

Tags

Next Story