கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் போராட்டம்
ஆர்ப்பாட்டம்
10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாகப்பட்டினத்தில் அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு அனைத்து அரசு அலுவ லர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி நாகப் பட்டினம் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு தொடக்கப்பள்ளி ஆசிரி யர் கூட்டணி மாநில தலைவர் லட்சுமிநாராயணன் தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு அலுவலக ஒன்றிய மாவட்ட தலைவர் மோகன், தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணி யாளர் சங்க மாநில பொது செயலாளர் காமராஜ், நகராட்சி மற்றும் மாநகராட்சி பணியாளர் சங்கங்களின் கூட்டமைப்பு மாவட்ட தலை வர் பாஸ்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பங்க ளிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூ திய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சரண்விடுப்பு உள் ளிட்ட பணப்பலன்களை மீண் டும் வழங்க வேண்டும். உட் பட அனைத்த துறைகளிலும் காலியாக உள்ள அனைத்து பணியிடங்களையும் நிரப்ப வேண்டும். அரசாணை 243 திரும்ப பெற வேண்டும் என்பது உட்பட 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
Next Story