அரசு ஊழியர்கள் சேவை மையத்தில் ஓட்டளிக்கலாம்

அரசு ஊழியர்கள் சேவை மையத்தில் ஓட்டளிக்கலாம்

கள்ளகுறிச்சி மாவட்ட ஆட்சியர்

கள்ளகுறிச்சி மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுப்பட்டுள்ள அதிகாரிகள் சேவை மையத்தில் வாக்களிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தங்களின் ஓட்டுக்களை தபால் மூலம் அளிப்பதற்கு பதிலாக, கலெக்டர் அலுவலகத்தில் உள்ள சேவை மையம் வழியாக ஓட்டளிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார். கலெக்டர் ஷ்ரவன்குமார் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், தேர்தல் பணிக்கு நியமனம் செய்யப்பட்டுள்ள அனைத்து நிலை அரசு அலுவலர்களும் அஞ்சல் ஓட்டுக்களை சேவை மையத்தில் செலுத்த வேண்டும். இதற்கான படிவங்களை யாரிடமும் ஓட்டுக்களை ஒப்படைக்க வேண்டியதில்லை. அதற்கு பதிலாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகத்தில் அஞ்சல் ஓட்டுகள் செலுத்துவதற்கென ஓர் தனி சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த சேவை மையத்தில் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள அனைத்து பணியாளர்களும் அஞ்சல் ஓட்டு செலுத்தலாம். தேர்தல் பணிக்கு நியமனம் செய்யப்பட்டுள்ள ஆசிரியர்கள் மற்றும் இதர அலுவலர்கள் தேர்தல் அலுவலர்களுக்கென நடைபெறும் பயிற்சி மையங்களில் உள்ள சேவை மையத்தில் மட்டுமே தங்களது அஞ்சல் ஓட்டினை செலுத்த வேண்டும். இம்முறை அஞ்சல் வழியாக தங்களின் ஓட்டுக்களை அனுப்பி வைத்திட இயலாது. எனவே தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் அனைவரும் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி அஞ்சல் ஓட்டுக்களை சேவை மையத்தில் செலுத்திட வேண்டுமென மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரான கலெக்டர் ஷ்ரவன்குமார் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story