அரசு ஊழியர்கள் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

விருதுநகரில் தமிழ்நாடு அனைத்து அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டம் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அனைத்து அரசு அலுவலர்கள் ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக ஆர்ப்பாட்ட ஒருங்கிணைப்பாளர்கள் தலைமையில், தமிழக அரசு புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமுல்படுத்த வேண்டும்,தமிழக அரசு நிறுத்தி வைத்துள்ள சரண்டர் விடுப்பு பணப்பலனை மீண்டும் வழங்கிட வேண்டும். ஏழாவது ஊதியக்குழுவில் உள்ள 21 மாத நிலுவைத் தொகையினை உடனடியாக வழங்க வேண்டும்.

தலைமைச் செயலகம் உட்பட அனைத்து துறைகளிலும் காலியாக உள்ள அனைத்து பணியிடங்களையும் நிரப்ப வேண்டும், கடந்த கடந்த 2006 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஒன்றாம் தேதி முதல் பணியேற்று ஏழாவது ஊதியக்குழு மூலம் மிகக்குறைவாக ஊதிய பெரும் இடைநிலை மற்றும் முதுகலை ஆசிரியர்களின் ஊதிய குறைப்பாட்டினை கலைந்திட வேண்டும்,சத்துணவு அங்கன்வாடி, ஊர்ப்புற நூலகர்கள், எம்.ஆர்.பி. செவிலியர்கள், ஓட்டுநர்கள் உள்ளிட்ட சிறப்பு காலமுறை ஊதியம் பெரும்பிரிவினர், தொகுப்பூதியம், மதிப்பூதியம், தினக்கூலி பெறுபவர்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும். உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

Tags

Next Story