அரசு ஊழியர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
ஆர்ப்பாட்டம்
தமிழக அரசு தனது தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளை காலம் தாழ்த்தாமல், புதிய ஓய்வூதிய திட்டத்தினை ரத்து , செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்திட வேண்டும் தமிழ்நாடு அரசு நிதி பற்றாக்குறையினால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பு சலுகையை பணியாளர்கள் பயன்பெற உடனடியாக வழங்கிட வேண்டும், தமிழக அரசு அலுவலர்களுக்கு வழங்கிய 7-வது ஊதிய குழு நிர்ணயத்தில் 21 மாத நிலுவைத் தொகையை பணியாளர்களுக்கு வழங்காமல் நிறுத்தி உள்ளதால் அதை வழங்கிட வேண்டும், தலைமைச் செயலகம் முதல் அனைத்து துறைகளிலும் உள்ள அனைத்து பிரிவு காலிப்பணியிடங்களையும் நிரப்பி பதவி உயர்வினையும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முன்பு தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டம், பிப்ரவரி 15ஆம் தேதி தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் மாவட்ட தலைவர் சீவகன் தலைமையில் நடைபெற்றது, இதில் தமிழக அரசுக்கு கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
. இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட பொருளாளர் புகழேந்தி மற்றும் அடிப்படை பணியாளர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் ராஜசேகர் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள்,உறுப்பினர்கள் ஆசிரியர்கள், பலர் கலந்து கொண்டனர்.