தமுக்கம் மைதானத்தில் அரசு பொருட்காட்சி

தமுக்கம் மைதானத்தில் அரசு பொருட்காட்சி

அரசு பொருட்காட்சி

மதுரை தமுக்கம் மைதானத்தில் அரசு பொருட்காட்சியை மதுரை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.
மதுரை தமுக்கம் மைதானத்தில் இந்த ஆண்டிற்கான அரசு பொருட்காட்சியை நேற்று முதல் துவங்கி உள்ளது. தேர்தல் நடைபெற்றதாலும் தொடர் கன மழை பெய்தாலும் பொருட்காட்சி தொடங்குவது தள்ளிப்போனது தற்போது இந்த அரசு பொருட்காட்சியை மாவட்ட ஆட்சியர் சங்கீதா நேற்று குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார். இந்த நிகழ்வில் மாநகராட்சி ஆணையர் தினேஷ் குமார் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பங்கேற்றனர். பொருட்காட்சியை துவக்கி வைத்த ஆட்சியர் பொருட்காட்சி அமைக்கப்பட்டுள்ள பல்வேறு அரங்குகளை பார்வையிட்டார். அங்குள்ள புகைப்பட அரங்குகள் உள்ளிட்டவற்றையும் அவர் பார்வையிட்டார். இந்த கண்காட்சியில் ஏராளமான பொதுமக்கள் முதல் நாளில் கண்டு மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags

Next Story