உடல் உறுப்பு தானம் செய்தவருக்கு அரசு மரியாதை
சூரக்குளம் பகுதியை சேர்ந்த நடராஜன் என்பவர் இறந்தநிலையில், உடல் உறுப்பு தானம் செய்திருந்ததால் அரசு மரியாதை அளிக்கப்பட்டது.
சூரக்குளம் பகுதியை சேர்ந்த நடராஜன் என்பவர் இறந்தநிலையில், உடல் உறுப்பு தானம் செய்திருந்ததால் அரசு மரியாதை அளிக்கப்பட்டது.
சிவகங்கை அருகே சூரக்குளம் பகுதியை சேர்ந்தவர் சிங்காரம் மகன் நடராஜன் (49) . இவர் உடல் நிலை பாதிக்கப்பட்டு, மதுரை தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார். இவரது உடல் உறுப்புகளை தானமாக வழங்குவதாக, அவரது குடும்பத்தினர் எழுதி கொடுத்தனர். இறந்தவரை கவுரவபடுத்தும் விதமாக சூரக்குளத்தில் அவரது உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. சிவகங்கை கோட்டாட்சியர் (பொறுப்பு) ஜெயமணி, தாசில்தார் சிவராமன், துணை தாசில்தார் லெனின், வருவாய் ஆய்வாளர் தங்கபாண்டி, வி.ஏ.ஓ., சரவணன், சிவகங்கை தாலுகா இன்ஸ்பெக்டர் மணிகண்டன் பங்கேற்றனர்
Next Story