உடலுறுப்பு தானம் செய்த வாலிபருக்கு அரசு மரியாதை
சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்து உடலுறுப்பு தானம் செய்த வாலிபருக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டது.
சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்து உடலுறுப்பு தானம் செய்த வாலிபருக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டது.
எலச்சிபாளையம் ஒன்றியம், மூலப்பாளையம் அருந்ததியர் தெருவை சேர்ந்தவர்கள் வெங்கடாசலம் 50, நித்யா 40 தம்பதியினர். இவரது மூத்த மகன் பிரதீப்குமார் 24. டிராக்டர் டிரைவராக பணிபுரிந்து வந்தார். கடந்த 16ம்தேதி இரவு 12.10மணியளவில், வேலகவுண்டம்பட்டி அருகேயுள்ள, எல்லப்பாளையத்தில் சாலை விபத்தில் பலத்த காயமடைந்தார். சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்தநிலையில், நேற்று முன்தினம் இரவு 12.10மணியளவில், பிரதீப்குமார் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். எனவே, இவரது உடலை உடலுறுப்பு தானம் செய்ய பெற்றோர்கள் முடிவெடுத்து, உறுப்புகளை தானம் செய்தனர். நேற்று காலை 10மணியளவில், பிரதீப்குமாரின் சொந்த ஊரான மூலப்பாளையம் கிராமத்தில், திருச்செங்கோடு ஆர்.டி.ஓ.,சுகந்தி, ஆர்.ஐ., அனுராதா முன்னிலையில், அவரது உடலுக்கு மலர்வளயைம் வைத்து அரசுமரியாதையுடன் உடல் தகனம் செய்யப்பட்டது. சோகத்தில் இருந்த பெற்றோருக்கு அதிகாரிகள் மரியாதை செலுத்தினர். இச்சம்பவம் அந்தகிராமத்தில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
Tags
Next Story