அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இருதயவியல் துறை சார்பில் இருதய நோயாளிகள் பிரிவில் ஆஞ்சியோகிராம் ஆஞ்சியோ பிளாஸ்ட் ஆகியவை துவங்கப்பட்டு இதுவரை மாவட்டம் முழுவதும் ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்டு சிகிச்சைக்காக வந்த இதய நோயாளிகள் 4000 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் இதய துடிப்பு குறைந்த நிலையில் வந்த 15 நோயாளிகளுக்கு இதயத்துடிப்பை அதிகரிக்கும் பேஸ்மேக்கர் கருவி பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு அவர்களை உயிர் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
இதில் தென் மாவட்டங்களிலேயே அரசு மருத்துவமனையில் முதன்முறையாக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருதய குழாயில் ஓட்டை ஏற்பட்டிருந்த கயத்தாறு பகுதியைச் சேர்ந்த 12 ஆம் வகுப்பு மாணவன் ஆறுமுகநேரி பகுதியை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவி மற்றும் 4 வயது குழந்தை ஒருவருக்கு இருதயத்தில் ஏற்பட்டிருந்த ஓட்டையை ஆஞ்சியோகிராம் மூலம் அடைத்து மருத்துவக் கல்லூரி இறுதயவியல் பிரிவு மருத்துவ துறை தலைவர் டாக்டர் பாலமுருகன் தலைமையிலான மருத்துவர்கள் சாதனை புரிந்துள்ளனர்.
இந்த சாதனை புரிந்த மருத்துவர் களை மருத்துவக் கல்லூரி முதல்வர் சிவக்குமார் பாராட்டினார் இருதயத்தில் ஏற்பட்டுள்ள ஓட்டை அடைப்பை சரி செய்ய தனியார் மருத்துவமனையில் 2 லட்சம் முதல் மூன்று லட்சம் வரை ஆகும் எனவே பொதுமக்கள் இருதயத்தில் ஓட்டை ஏற்பட்டால் பீதி அடையாமல் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்து மருத்துவ காப்பீடு திட்டம் மூலம் இலவசமாக இருதய சிகிச்சை பெற்று பயனடையலாம் என மருத்துவர்கள் கேட்டுக் கொண்டனர்