அரசு ஆஸ்பத்திரி ஊழியர் தற்கொலை
கன்னியாகுமரி மாவட்டம்,ஆசாரிப்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் சுரேந்திரன் (52). இவர் குமரி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அலுவலக உதவியாளராக வேலை பார்த்து வந்தார். நேற்று காலை சுரேந்திரன் பணிக்கு சென்ற போது, அவர் திடீரென வாந்தி எடுத்தார்.
உடனடியாக அவரை சகப் பணியாளர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அப்போது சுரேந்திரன் தான் விஷ மாத்திரைகளை தின்று விட்டதாக கூறியுள்ளார். இதை அடுத்து டாக்டர் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர் தொடர்ந்து அவரது குடும்பத்தினருக்கும் , போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் நடத்திய விசாரணையில் சுரேந்திரன் கடன் பிரச்சனை காரணமாக கடந்த சில நாட்களாக மன வருத்தத்தில் இருந்து வந்துள்ளதாகவும், இந்த நிலையில் அவர் விஷ மாத்திரைகளை தின்றதும் தெரிய வந்தது.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் பரிதாபமாக உயிரிழந்தார். உடல் பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது. தற்கொலை செய்து கொண்ட சுரேந்திரனுக்கு மனைவியும இரண்டு பிள்ளைகளும் உள்ளனர். ஆசாரிபள்ளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.