அரசு ஐ.டி.ஐ– களில் சேர ஜூன் 13 வரை விண்ணப்பிக்கலாம்

அரசு ஐ.டி.ஐ– களில் சேர ஜூன் 13 வரை விண்ணப்பிக்கலாம்

பைல் படம் 

அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் சேர இணையதளம் மூலம் ஜூன் 13 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.

அரியலூர் மற்றும் ஆண்டிமடம் அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில், நிகழாண்டிற்கான மாணவ,மாணவிகள் சேர்க்கைக்கு இணையதளம் மூலம் ஜூன் 13 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மேற்கண்ட அரசு தொழிற் பயிற்சி நிலையங்கள் மற்றும் தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர இணையதளம் வாயிலாக மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று, 40 வயதுக்குள் இருக்க வேண்டும். பெண்களுக்கு வயது வரம்பு கிடையாது. விண்ணப்பக் கட்டணம் ரு.50}யை ஏடிஎம், கடன் அட்டை மற்றும் இணையதளம் வாயிலாக செலுத்த வெண்டும்.

அரியலூர் அரசு தொழிற்பயிற்சி நிலையம், ஆண்டிமடம் அரசு தொழிற் பயிற்சி நிலையம், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் ஆகிய இடங்களில் செயல்படும் சேர்க்கை உதவி மையங்களிலும், தனியார் கணினி மையம் மூலமும் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு அரியலூர் அரசு தொழிற் பயிற்சி நிலையம் தொலைப்பேசி 9499055877, 04329}228408. ஆண்டிமடம் அரசு தொழிற் பயிற்சி நிலையம் தொலைப்பேசி 9499055879 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.

Tags

Read MoreRead Less
Next Story