செய்யாறு அருகே ரூ.4 கோடி மதிப்பீட்டில் அரசு ஐடிஐ கட்டிடங்கள் கட்டப்பட உள்ளது - ஒ.ஜோதி எம்எல்ஏ தகவல்
அங்கன்வாடி மையங்கள் திறப்பு விழா
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த, அனக்காவூர் ஒன்றியம் குளமந்தை,வினாயகபுரம் ஆகிய கிராமங்களில் ரூபாய் 27.61 லட்சம் மதிப்பீட்டில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையங்கள் திறப்பு விழா நேற்று காலை நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர்கள் அமுதவல்லி மணி, கனிமொழி மோகன் ஆகியோர் வரவேற்றனர். ஒன்றிய குழு தலைவர் திலகவதி ராஜ்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் லோகநாதன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற எம்எல்ஏ ஓ.ஜோதி இரண்டு அங்கன்வாடி மைய கட்டடங்களை திறந்து வைத்து, 8 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கி பேசியதாவது, மிக்ஜாம் புயலால் சென்னை நகரம் பாதிக்கப்பட்டது என்றாலும் முதல்வரின் புயலுக்கு முன்னும் பின்னும் எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கையால் பெரும் இழப்பீடுகள் தவிர்க்கப்பட்டு உயிரினங்கள் காக்கப்பட்டன. மத்திய அரசின் புயல் சேதாரம் மதிப்பீட்டு குழு ஆய்வு செய்ய வந்தபோது தமிழக அரசின் பணிகளை வெகுவாக பாராட்டியது. முதல்வர் பெண்கள் நலன் மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் அளித்து செயல்பட்டு வருகிறார் புதுமைப்பெண் திட்டம், இல்லம் தேடி கல்வி திட்டம்,காலை சிற்றுண்டி திட்டம்,மக்களை தேடி மருத்துவம்,மகளிர் உரிமைத் தொகை, போன்ற திட்டங்கள் மூலம் வாழ்வாதாரம், கல்வி தரம் உயரவும் தமிழக அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது மேலும் புதியதாக துவங்கப்பட்டு செயல்பட்டு வரும் செய்யாறு அரசு ஐ டி க்கு ரூபாய் 4 கோடி மதிப்பீட்டில் கட்டடங்கள் கட்டும் பணி செய்யார் அடுத்த புரிசையில் விரைவில் அமைய உள்ளது. மக்கள் நல திட்டங்களை நாளும் செய்து வரும் தமிழக முதல்வருக்கு உறுதுணையாக நாம் என்றும் இருக்க வேண்டும் என்று எம்எல்ஏ ஜோதி பேசினார். இதில் பீடிஓக்கள் ஹரி, குப்புசாமி, ஒன்றிய செயலாளர் ரவிக்குமார் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சுப்பிரமணி,விவசாய தொழிலாளர் அணி துணைத்தலைவர் ரவி, மாவட்ட பிரதிநிதிகள் மாசிலாமணி, தாஸ், ஒன்றிய பொருளாளர் நந்தகுமார்,ஒன்றிய துணை செயலாளர் பழனி, ஊராட்சி மன்ற தலைவர்கள் முருகன், ராதிகா குமாரராஜா,திமுக நிர்வாகிகள் கருணாநிதி ஞானமுருகன்,தமிழரசன் ,தனசேகர், கண்ணன்,குமார்,வினோத், வெங்கடேசன், தலைமை ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், மாணவர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் அபிராமி நன்றி கூறினார்.
Next Story