காலநிலை மாற்றம் குறித்த அரசு அலுவலர் பயிலரங்கம்

காலநிலை மாற்றம் குறித்த அரசு அலுவலர்  பயிலரங்கம்

பயிலரங்கம் 

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுற்றுசூழல் மற்றும் பருவநிலை மாற்றத்துறை சார்பில் காலநிலை மாற்றம் குறித்த அரசு அலுவலர்களுக்கான மாவட்ட அளவிலான பயிலரங்கம் நடைபெற்றது.

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக முதன்மை கூட்டரங்கில் சுற்றுசூழல் மற்றும் பருவநிலை மாற்றத்துறை சார்பில் காலநிலை மாற்றம் குறித்த அரசு அலுவலர்களுக்கான மாவட்ட அளவிளான பயிலரங்கம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ், தலைமையில், மாவட்ட வன அலுவலர் அபிஷேக் தோமர், முன்னிலையில் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது. தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம் அமைத்துள்ள ஒரே மாநிலம் நமது தமிழ்நாடு மட்டும்தான் என்பதில் பெருமிதம் அடைகிறேன். இந்தக் காலநிலை மாற்றம் என்பது நாம் சந்தித்துக் கொண்டிருக்கின்ற ஒரு சவாலான இடர்பாடு என்பதை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, எந்தெந்த மாவட்டங்களில் எந்த வகையான இடர்பாடுகள் உள்ளது. எந்த வகையான சவால்கள் உள்ளது, அதற்கான தீர்வுகள் என்ன என்பதை கண்டறிவதற்காகவும் அந்ததெந்த மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலர்களுக்கு தகவல்களை தெரிவித்து பயிற்சி கொடுக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில்தான் மாவட்ட அளவிலான இந்த பயிலரங்கம் நடைபெறுகிறது. பல்வேறு துறைகளில் இருந்து அலுவலர்கள் இன்று பயிலரங்கத்தில் கலந்துகொண்டுள்ளதால் இதனை ஒரு நல்ல வாய்ப்பாக கருதி காலநிலை மாற்றதால் நமது மாவட்டத்திற்கும் மாநிலத்திற்கும் எந்த விதமான இடர்பாடுகள் வரலாம் அதனை எப்பlடி எதிர்கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த பயிலரங்கத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். என்றார்.

Tags

Next Story