இடிந்து விழும் நிலையில் அரசு குடியிருப்பு வீடுகள்

இடிந்து விழும் நிலையில் அரசு குடியிருப்பு வீடுகள்

 சிவகாசியில் இடிந்து விழும் நிலையில் உள்ள அரசு குடியிருப்பு வீடுகளை, அப்புறப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

சிவகாசியில் இடிந்து விழும் நிலையில் உள்ள அரசு குடியிருப்பு வீடுகளை, அப்புறப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே சாட்சியாபுரத்தில் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு அரசு ஊழியர்கள் வாடகை குடியிருப்பு வீடுகள் கட்டப்பட்டுள்ளது. 174 குடும்பத்தினர் வசிக்கும் வகையில் 8 அடுக்கு மாடி குடியிருப்பு வீடுகள் கட்டப்பட்டுள்ளது.இந்த அடுக்கு மாடி குடியிருப்புகளை அரசின் வீட்டு வசதி வாரியம் சீராக பராமரிக்காததால் ஒவ்வொறு அடுக்கு மாடி கட்டிடமும் படிப்படியாக பழுதடைந்தது. இதனால் இங்கு குடியிருந்த அரசு ஊழியர்கள் வீடுகளை காலி செய்துவிட்டனர்.

கடந்த சில ஆண்டுகள் வரை 20 குடும்பங்கள் மட்டுமே வசித்து வந்தனர்.தற்போது அனைத்து கட்டிடமும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. குடியிருப்புகள் முற்றிலும் சேதமாகி இருப்பதால் இங்கு வசித்த அனைத்து குடும்பங்களும் வேறு வாடகை கட்டிடத்திற்கு சென்று விட்டனர். கட்டிடம் முற்றிலும் சேதமாகி இருப்பதால் கட்டிடங்களின் அருகே தனியார் மருத்துவமனை வர்த்தக கடைகளுக்கு வரும் பொதுமக்கள் அச்சத்துடன் கடந்து செல்கின்றனர்.கனமழை பெய்யும் போது அந்த பகுதியை கடந்து செல்வதை பொதுமக்கள் தவிாத்து வருகின்றனர்.பெரும் அசாம்பாவிதம் எதுவும் நடக்கும் முன் குடியிருப்பு வீடுகள் உடனடியாக இடித்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Tags

Next Story