உடல் உறுப்பு தானம் செய்த மாணவியின் உடலுக்கு அரசு மரியாதை

உடல் உறுப்பு தானம் செய்த மாணவியின் உடலுக்கு அரசு மரியாதை

காஞ்சனா 

தென்காசி மாவட்டம் சுரண்டை வரகுணராமபுரத்தைச் சோ்ந்தவா் காஞ்சனா (20). கோவையில் உள்ள பொறியியல் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்த இவா், கடந்த திங்கள்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் பயணம் செய்தபோது விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்தாா். இதையடுத்து குடும்பத்தினா் ஒப்புதலுடன், அவரது 2 சிறுநீரகங்கள் தானமாகப் பெறப்பட்டது. இதனால் கோவை மற்றும் சேலம் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 2 போ் மறுவாழ்வு பெற்றனா். இறந்த மாணவியின் உடல் சொந்த ஊருக்கு புதன்கிழமை நள்ளிரவு கொண்டு வரப்பட்டது. அரசு சாா்பில் வீரகேரளம்புதூா் வட்டாட்சியா் அழகப்பராஜா மரியாதை செலுத்தினாா். இதையடுத்து மாணவியின் உடல் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

Tags

Next Story