பார்வை திறன் குறையுடையோருக்கான அரசுப் பள்ளி சாதனை

பார்வை திறன் குறையுடையோருக்கான அரசுப் பள்ளி சாதனை

தஞ்சாவூரில் தொடர்ந்து 12 ஆண்டுகளாக 100 விழுக்காடு தேர்ச்சி பெற்று பார்வை திறன் குறையுடையோருக்கான அரசுப் பள்ளி சாதனைப் படைத்துள்ளது.


தஞ்சாவூரில் தொடர்ந்து 12 ஆண்டுகளாக 100 விழுக்காடு தேர்ச்சி பெற்று பார்வை திறன் குறையுடையோருக்கான அரசுப் பள்ளி சாதனைப் படைத்துள்ளது.

தஞ்சாவூரில் தொடர்ந்து 12 ஆண்டுகளாக 100 விழுக்காடு தேர்ச்சியை பெற்று வருகிறது பார்வைத் திறன் குறையுடையோருக்கான அரசுப் பள்ளி. தஞ்சாவூர் மேம்பாலம் அருகே, மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணையரகத்தின் கீழ், பார்வைத் திறன் குறையுடையோருக்கான அரசுப் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் முதல் வகுப்பு முதல் ப்ளஸ் 2 வரை வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்வினை ஐந்து மாணவிகளும், 14 மாணவர்களும் என 19 பேர் தேர்வு எழுதினர். இதில் தேர்வு எழுதிய 19 பேரும் தேர்ச்சி பெற்று 100 விழுக்காடு தேர்ச்சியை இப்பள்ளி பெற்றுள்ளது. தொடர்ந்து இப்பள்ளி பத்தாம் வகுப்பு தேர்வில் 12 ஆண்டுகளாக நூறு விழுக்காடு தேர்ச்சி பெற்று வருவது குறிப்பிடதக்கது.

இதுகுறித்து பள்ளியின் தலைமையாசிரியர் செ.மாணிக்கராஜ் கூறியதாவது: எங்களது பள்ளியில் பார்வைத் திறன் குறையுடையோர் பயின்று வருகின்றனர். அவர்களுக்கு பிரெய்லி எழுத்து மூலம் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்கள் நடத்தப்பட்டு, தேர்வுகளை ஆசிரியர்களின் உதவியோடு மாணவர்கள் எழுதினர். இந்தாண்டு தேர்வு எழுதிய 19 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். எங்களது பள்ளி தொடர்ந்து 12 ஆண்டுகளாக பத்தாம் வகுப்பு தேர்வில் 100 விழுக்காடு தேர்ச்சியை பெற்றுள்ளது" என்றார். இதேபோல் ப்ளஸ் டூ தேர்விலும் கடந்த 8 ஆண்டுகளாக 100 விழுக்காடு தேர்ச்சியை இப்பள்ளி பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story