கெங்கவல்லியில்அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

கெங்கவல்லியில்அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடைபெற்றது.

கெங்கவல்லி: சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் கெங்கவல்லி அரசு பள்ளியில்முன்னாள் மாணவர்கள் சந்திப்பு விழா நிகழ்ச்சிகெங்கவல்லி அரசு மேல்நிலைப்பள்ளியில், கடந்த 1992-93ம் ஆண்டு படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு விழா, பள்ளி வட்டார வளமையகட்டிடத்தில் நடந்தது.

விழாவிற்கு ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் கணேசன், ராஜகோபால், நாகராஜ் ஆகியோர் தலைமைவகித்தனர். அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சாமுவேல் முன்னிலை வகித்தார். விழாவில், கெங்கவல்லி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில், கடந்த 2022-23ம் ஆண்டு 12ம் வகுப்பில் முதல் மதிப் பெண் பெற்ற தாமரைக்கனி என்ற மாணவனுக்கு, ₹3ஆயிரம், 10ம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற மவுலீஸ்வரனுக்கு ₹2ஆயிரம் வழங்கப்பட்டது.

பின்னர், பள்ளியின் கணினி அறைக்கு ₹40 ஆயிரம் மதிப்பீட்டில் டைல்ஸ் ஒட்டிய அறையை ரிப்பன் வெட்டி தொடங்கிவைத்தனர் முன்னாள் மாணவர்கள் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு விழாவை ஒருங்கிணைப்பாளராக வேல்முருகன், சாதிக்ஷெரிப், சக்திவேல், கவிதா மற்றும் அனைத்து முன்னாள் மாணவர்கள் செய்திருந்தனர்.

Tags

Next Story