மோசமான நிலையில் அரசு பள்ளி கட்டிடங்கள்!
திருமயத்தில் மோசமான நிலையில் அரசு பள்ளி கட்டடங்கள் உள்ளன.
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சேதமடைந்ததால் கைவிடப்பட்ட கட்டடங்களை அசம்பாவிதங்கள் நேரும் முன்னர் இடித்து அப்புறப்படுத்த வேண்டுமென பொதுமக்களும், பெற்றோர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருமயம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில், பள்ளி மைதானத்தின் இடதுபுறம் இருக்கும் முதல்மாடியுடன் கூடிய 10 வகுப்பறை கட்டடமும், அருகே உள்ள ஆய்வகமும் மிகவும் சேதமடைந்ததால், மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பொதுப்பணித் துறையினரும், கல்வித் துறையினரும் கைவிடப்பட்டதாக இக்கட்டடத்தை அறிவித்தனர்.
இதையடுத்து இங்கு வகுப்புகள் நடத்துவது நிறுத்தப்பட்டது. கைவிடப்பட்ட இந்தக் கட்டடம் மேலும் பழுதாகி இடிந்து விழுந்து விபத்து நேரிடும் முன்னதாகவே இடித்து அப்புறப்படுத்த வேண்டுமென பெற்றோர்களும், சமூக ஆர்வலர்களும் வலியுறுத்துகின்றனர். இதுகுறித்து சமூக ஆர்வலர் எஸ். விஸ்வநாதன் கூறியது: தமிழகம் முழுவதும் பழுதடைந்த பள்ளிர்தமிழகம் முழுவதும் பழுதடைந்த பள்ளிக் கட்டடங்களை இடித்து விட்டு, புதிய கட்டடங்களைக் கட்ட தமிழக அரசு ஆணையிட்டது. ஆனால், அதற்கான பணிகள் இன்னும் வேகம் பெறவில்லை. எனவே, அனைத்தையும் இடித்துவிட்டு, புதிய பள்ளிக் கட்டடங்களை கட்ட வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டது. ஆனால், கடந்த மே மாதம் வரை 3,482 பள்ளிகளில் 4,808 பழுதடைந்த கட்டடங்கள் மட்டுமே இடிக்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறைபுள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இன்னும் 6,033 பள்ளிகளில் உள்ள 8,228 கட்டடங்கள் இடிக்கப்பட வேண்டும். எனவே, மாணவர்களின் நலன் கருதி திருமயம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உள்பட மாவட்டம் முழுவதும் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்ட பழைய வகுப்பறை கட்டடங்களைவிழும் நிலையிலான கட்டடங்கள் ஏதேனும் இருந்தால் வட்டார வளர்ச்சி அலுவலருக்கோ, பொதுப்பணித் துறைக்கோ உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும்.
பழுதடைந்து, இடிந்து விழும் நிலையில் உள்ள கட்டடங்களுக்கு அருகில் மாணவர்கள் செல்ல அனுமதிக்காமல் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும் என ஆட்சியர் மெர்சி அறிவுறுத்தினார்.ரம்யா ஆட்சியரின் அறிவுறுத்தலின்படி, பழுதான பள்ளிக் கட்டடங்களை இடிக்கும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.