அரசுபள்ளி சத்துணவில் பல்லி - 3 குழந்தைகளுக்கு சிகிச்சை
மற்ற மாணவர்களுக்கு புதிய உணவு கொடுக்கப்பட்டது
குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே, காஞ்சிரகோடு அரசு உயர் நிலை பள்ளி வெள்ளிவிளாகத்தில் செயல்படுகிறது. இது சுமார் 75 ஆண்டுகளுக்கு மேலான பழமையான பள்ளி ஆகும். தற்போது 100க்கும் மேற் பட்ட மாணவ- மாண விகள் பயின்று வருகின்றனர். நேற்று வழக்கம்போல் வகுப்புகள் நடந்தது. மதிய உணவில் எதிர் பாராத விதமாக பெரிய பல்லி காணப்பட்டது. இதை 3 மாணவ-மாணவிகள் மட்டும் சாப்பிட்டுள்ளனர். உடனே சமையல் ஆயா பார்த்து உள்ளதால் உணவை மாற்றி உள்ளனர். அதிர்ஷ்டவசமாக மற்ற மாணவ- மாணவிகள் உண்ணவில்லை. சிலர் மதிய உணவு வாங்கினாலும் வீட்டுக்கு கொண்டு செல்வது வழக்கமாம். அதுவும் திரும்பி வாங்கப்பட்டு புதிய உணவு கொடுக்கப்பட்டது. 3 குழந் தைகளுக்கும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் பெரிய பாதிப்பு ஏற்படவில்லை.
Next Story