தருமபுரி மாவட்ட அளவில் அரசு பள்ளி மாணவி சாதனை

தருமபுரி மாவட்ட அளவில் அரசு பள்ளி மாணவி சாதனை

மாணவிக்கு பாராட்டு 

தர்மபுரி மாவட்ட அரசு பள்ளிகளில் முதல் மதிப்பெண் பெற்று பாலக்கோடு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி சாதனை படைத்தார்.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு சட்டமன்றத் தொகுதி,பாலக்கோடு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் +2 படித்து வரும் மாணவி ஸ்ருதி.இவர் +2 தேர்வில் மாணவி ஸ்ருதி தமிழ் - 98, ஆங்கிலத்தில் 96, இயற்பியல் 100, வேதியியல் 100, தாவரவியல் 98, கணிதவியல் 98 என மொத்தம் 600க்கு 590 மதிப்பெண் பெற்று அரசு பள்ளிகளில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

இதுகுறித்து மாணவி கூறும் போது பள்ளி ஆசிரியர்கள் அன்றாடம் கற்று தரும் பாடங்களை அன்றைக்கே படித்தாலே போதுமானது, என்றும், இதற்கென்று தனியாக சிறப்பு வகுப்புக்கள் எதுவும் போகவில்லை என்றும். அதே போன்று இரவு நேரங்களில் நீண்ட நேரம் கண்விழித்து படிக்கவில்லை என்றும். ஆசிரியர்களின் வழிகாட்டுதலின் படி படித்தாக தெரிவித்தார். கோவை வேளாண்மை கல்லூரியில் தாவரவியல் விஞ்ஞானி ஆனர்ஸ் படிப்பு படித்து இந்தியன் அக்ரிகல்சர் ரிசர்ச் இன்ஸ்ட்டியுடில் தாவரவியல் விஞ்ஞானியாக பணி புரிவதே தனது லட்சியம் என்று தெரிவித்தார்.

முதலிடம் பெற்ற மாணவிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் புனிதா, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கே.வி.ரங்கநாதன். பொருளாளர் பி.கே.பாலகிருஷ்ணன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் லோகேஸ்வரி மற்றும் ஆசிரியர்கள் இனிப்பு வழங்கி சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story